திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் தலைவராக இருப்பவர் எஸ்.எம்.பி மூர்த்தி. இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி. இவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி மு க தலைமையிலான கூட்டணியே நாற்பது இடங்களில் வெல்லும் என்கிறார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த அமோக வெற்றி பெறும். அதேசமயம் என்னை ஈரோடு மாவட்டத்தில் பணி செய்திட உத்தரவிட்ட தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் நல்லாட்சியும் அதன் விளைவாக மக்கள் பெற்றிருக்கும் பயன்களே எங்களுக்கு சாதனை வெற்றியை மக்கள் எங்களுக்கு பரிசாக அளிப்பார்கள் என்பதில் அய்யத்திற்கு இடமில்லை. நாடும் நமதே நாற்பதும் நமதே. இவ்வாறு எஸ். எம். பி.மூர்த்தி தெரிவித்தார்.