மரக்கடை ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ.இ தொடக்கப்பள்ளிதான் அந்த பெருமைக்குரிய பள்ளி. கோவையின் கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன் மற்றும் ஆடிஸ் பாதிரியார் முயற்சியால் 1831ல் இப்பள்ளி துவங்கப்பட்டது. முதலில் லண்டன் மிஷன் சொசைட்டியின் 'வெர்னாகுலர் ஸ்கூல்' என அறியப்பட்ட இப்பள்ளிஇ பின்னர் லண்டன் மிஷன் பள்ளியாக மாறியது. மாவட்டம் முழுவதும் துவங்கப்பட்ட லண்டன் மிஷன் பள்ளிகள்இ 1947ல் சி.எஸ்.ஐ. பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர் கோவையில் உள்ள விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் அமைந்த கல்லூரிகளுள் ஒன்றாகும். விவசாய பொறியியல் கற்பிக்கத் தென்னிந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி ஆகும். ஜீலை மாதம் 1972 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதுநிலை கல்வி 1977 ஆம் ஆண்டிலும் முனைவர் பட்டப் படிப்பானது 1987 ஆம் ஆண்டிலும் உணவு பதப்படுத்தும் பொறியியல் துறை 1998 ஆம் ஆண்டிலும் தொடங்கியது . நாட்டிலேயே முதல் முறையாக ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரு தொழில்நுட்ப இளங்கலை பட்டப் படிப்பு துறைகள் உள்ளன. அவை உணவு பதப்படுத்தும் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல் ஆகும். இவ்விரண்டு்ம் நான்கு ஆண்டுகள் கற்க வேண்டிய துறைகளாகும்.
P S G தொழில்நுட்ப கல்லூரி பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி ( பி. எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி) தமிழ் நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இது அரசு உதவி பெறும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியாகும். கோயம்புத்தூரில் 1951 ஆம் ஆண்டு ஜி. ஆர். கோவிந்தராஜலு, டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் என்பவர்களால் உருவாக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியாவில் தொழிற்சாலையுடன் கூடிய ஒரே கல்லூரியும் இதுவாகும்.[1] குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்: மயில்சாமி அண்ணாதுரை - திட்ட இயக்குனர்இ சந்திராயன்-1 திட்டம்இ இந்திய விண்வெளி ஆய்வு மையம். சிவ நாடார் - நிறுவனர் மற்றும் தலைவர்இ ஹச் சி எல் கே. பாண்டியராஜன்இ நிறுவனர் மா ப்போய் 1926 ஆம் ஆண்டு பூளைமேடு சாமநாயுடு கோவிந்தசாமி நாயுடுவால் நிறுவப்பட்ட பி. எஸ். ஜி அறக்கட்டளையின் கீழ் அமைக்கப்பட்டதால் அவர் நினைவாக பூ. சா. கோ. என்னும் பெயர் வைக்கப்பட்டது. இக்கல்லூரியின் தற்போதைய முதல்வர் டாக்டர் ஆர். ருத்தரமூர்த்தி. இந்நிறுவனம் மூன்று 5 வருட ஒருங்கிணைந்த சாண்ட்விச் பொறியியல் படிப்புகளை வழங்குகிறது. இது வகுப்பு அறை பயிற்சியை தொழில்துறை பயிற்சி மூலம் ஒருங்கிணைக்கிறது.