21.6.2020 உலக யோகா தினத்தை முன்னிட்டு (INTERNATIONAL YOGA DAY - OZONE YOGA) 5.30மணி முதல் 6மணி வரை ஓசோன் யோகா மையத்தின் யோகா நிகழ்ச்சி பொதிகை டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது அனைவரும் கண்டு பயன் பெற வேண்டுகிறோம். உலக யோகா தின நல்வாழ்த்துக்களை யோக ஆசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் உலக யோக தினத்தை முன்னிட்டு யோக சாதனை புரிந்த பள்ளி மாணவன் பிரதிவிராஜிற்கு கோவை பத்ம ஸ்ரீ நானம்மாள்(யோக பாட்டி) ஓசோன் யோக டிரஸ்ட் சார்பில் ரூ.16000க்கான காசோலையை யோக ஆசிரியர் பாலகிருஷ்ணன் வழங்கினார். இவர் யோக தொடர்பான ஆலோசனைகளையும் YOGA PATTI SON என்ற YOUTUBE வளைதளத்தில் யோக ஆசிரியர் பாலகிருஷ்ணன் (Yoga Balakrishnan) பகிர்ந்து வருகிறார்.