logo
add image

பிளஸ் 2 தேர்ச்சியில் கோவை முன்னேற்றம் : -

கடந்த மார்ச், 1 முதல், 19 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில், 120 மையங்களில், 15 ஆயிரத்து, 352 மாணவர்கள், 19 ஆயிரத்து, 648 மாணவியர் என, 35 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது; 14 ஆயிரத்து, 383 மாணவர்கள், 18 ஆயிரத்து, 870 மாணவியர் என, 33 ஆயிரத்து, 253 பேர் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல் மாணவர்களை காட்டிலும், மாணவியரே அதிக தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கின்றனர். தேர்வெழுதிய, 107 மாற்றுத்திறன் மாணவர்களில், 100 பேர் தேர்ச்சி பெற்றனர். தோல்வியும் உண்டு!தமிழ், பிரெஞ்ச், இந்தி உள்ளிட்ட ஆறு மொழிப்பாடங்களில், 321 பேரும், ஆங்கிலத்தில், 362 பேரும் தேர்ச்சி பெறவில்லை. கோவையில், ஒரு பாடத்தால் மட்டும், 321 பேரும், இரண்டு பாடங்களில் 119 பேரும், மூன்று பாடங்களில் 289 பேரும், நான்கு பாடங்களில் 205 பேரும், ஐந்து பாடங்களில், 124 பேரும், ஆறு பாடங்களிலும் 19 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.கணிதத்தில் மட்டும், 129, இயற்பியலில் 166, வேதியியலில் 66, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், 14 என்ற அளவில் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள், தேர்ச்சி பெறவில்லை. பொருளாதாரத்தில், 235, வணிகவியலில் 228, கணக்குப்பதிவியலில் 180 பேர், வரலாறு பாடத்தில் 86 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவில், கடந்தாண்டு, 95.48 சதவீதம் தேர்ச்சி பெற்று, கோவை மாவட்டம் எட்டாம் இடம் பெற்றிருந்தது. இவ்வாண்டு, 95.01 சதவீதம் பெற்று, 0.47 சதவீதம் குறைந்திருந்தாலும், நான்காம் இடத்துக்கு முன்னேறியது. கடந்த, 2017ல், 95.83 சதவீதத்துடன், 10ம் இடத்தில் இருந்தது. கடந்த இரு ஆண்டுகளாக, கல்வித்துறை முன்னேற்றப் பாதையில் தடம் பதிக்கிறது.முதன்மை கல்வி அதிகாரி முருகன் கூறுகையில், ''கோவை மாவட்டம், கடந்தாண்டை காட்டிலும், 0.4 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு வகுப்பு மூலம் மேம்படுத்துவோம். தற்போது, நான்காம் இடத்தில் இருந்தாலும், மேலும் முன்னேற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.முதலிடம் எப்படி?கோவை மாவட்டத்தில், 35 ஆயிரம் பேர் தேர்வெழுதியதில், 33 ஆயிரத்து, 253 பேர் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 835 பேர் தேர்வெழுதினர்; 23 ஆயிரத்து, 686 பேர் தேர்ச்சி பெற்றனர். குறைந்த மாணவர்களுடன் அதிக தேர்ச்சி பெற்று, 95.37 சதவீதத்துடன் திருப்பூர் முதலிடம் பெற்றுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


footer
Top