பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் 19வது ஆண்டு விழா நேற்று 23-02-19 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கோவை காமாட்சிபுரி ஆதினம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், திருப்பராய்த்துறை - கோவை கிளை ஸ்வாமி, வீரபத்ரானந்த சுவாமிகள் திருமுருகன் பூண்டி திருமுருக நாத சுவாமி திருமடம் தவத்திரு சுந்தர ராச அடிகளார் சுவாமிகள் ஆசிரமத்திற்கு வருகை தந்து அருளாசி வழங்கினார்கள் வரவேற்புரை - ஆசிரம பொது மேலாளர் சங்கர் ஆத்மா ஆற்றினார்கள் மாலை 5.30 மணிக்கு பக்தி மெல்லிசை சூலமங்கலம் பாலகிருஷ்ணன் ஆத்மாவும் 6 மணிக்குசெ ண்ட மேளம்- போத்தனூர்-ஸ்ரீ பால மணி கண்டன் வாத்தியக்குழுவினர் வாசிக்க 7 மணிக்கு பரதம் - ஸ்ரீ நாட்டிய நிகேதன் பரதத்துடன் விழா சிறப்புற நடைபெற்றது. கோவை ப்ரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் குருஜி சிவாத்மா அவர்கள் வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வாழ்த்தி பேசினார்கள். மேலும் 19 ஆண்டு நிகழ்வுகளை பட்டியலிட்டு பேசினார்கள். இந்த விழா சிறப்பாக நடக்க அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்து சேவையாளர்களும் சிறப்புற செய்தார்கள்.