logo
add image
the kovai city

கோவையில் அதிமுக கட்சி சார்பில் 259 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி சுந்தராபுரம் பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தில் கிணத்துக்கடவு சட்ட மன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு 219 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலும் அவர் பேசும்போது எட்டிகுறிச்சி, பாலத்துறை, பிச்சனூர், மயிலேறிபாளையம், அரிசிபாளையம், பிள்ளையார் புரம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை அடுத்து தமிழக முதல்வர், துனை முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரிலும் உள்ளாட்சி துறை அமைச்சர் S.P. வேலுமணி முயற்சியினால் 259 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் பொழுது எதிரிகள் பொய் பிரச்சாரத்துடன் மக்களை அனுகுவார்கள். ஆனால் மக்களுக்கான ஒரே கட்சி அம்மாவின் அதிமுக கட்சி மட்டுமே. இன்று வரை மக்களின் தேவைகள் அனைத்தும் சிறந்த முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்க நமது உள்ளாசி துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் திறம்பட செய்து வருகிறோம். எதிகட்சிகளின் பொய் பிரச்சாரங்களை நம்பவேண்டாம் என்றும் கூறினார்.

footer
Top