ஊரடங்கின்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், மின்கட்டணம், நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு நிதி நெருக்கடியில் இருந்தாலும், தொழில் நிறுவனங்கள் பல, தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முன்வந்துள்ளன. தொழிலாளர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்க, இந்த ஆண்டு, 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சில நிறுவனங்கள் பட்டுவாடாவும் செய்துள்ளன. மாதத்தின் துவக்கத்திலேயே, சம்பளம் மற்றும் போனஸ் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், சில தொழில் நிறுவனங்களுக்கு சிரமம் இருந்தது.அரசின் விதிமுறைகளை பின்பற்றி குறைந்தபட்ச போனஸ், 8.33 சதவீதம் வழங்கப்படுவதை, பல நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் தவணைக்கான காலக்கெடு நீட்டிப்பை, வரும் மார்ச் 2021 வரை நீட்டித்திருந்தால், தொழில் நிறுவனங்கள் சிக்கலின்றி, செயல்பட வழி ஏற்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.