logo
add image
the kovai city

துாய்மையான நகரங்கள் பட்டியலில், 16ம் இடத்தில் இருந்த கோவை மாநகராட்சி, 40ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

துாய்மையான நகரங்கள் பட்டியலில், 16ம் இடத்தில் இருந்த கோவை மாநகராட்சி, 40ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், சர்வேக்சன் குழுவினர், நாடு முழுவதும் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்து, தர வரிசை பட்டியல் வெளியிடுகின்றனர்.இக்குழுவினர் வரும் சமயங்களில், கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஜோடனை வேலைகள் செய்வது வழக்கம். தினமும் இரண்டு முறை குப்பை அள்ளுதல், வர்த்தக பகுதிகளில் இரண்டு குப்பை தொட்டி வைப்பது, பிளீச்சிங் பவுடர் துாவுதல் உள்ளிட்ட பணிகள் செய்வர்.இம்முறையும், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட சில பகுதிகளில், பச்சை மற்றும் ஊதா நிறத்தில் இரட்டை குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. ஆனால், ஆய்வு குழுவினர் ரகசியமாக வந்து சென்றதால், மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஏமாந்து போயினர்.இதற்கு முன் மதிப்பெண் அடிப்படையில், 'ரேங்க்' வழங்கப்பட்டது. அதில், ஆவணங்கள் சமர்ப்பிப்பதில், அதிக மதிப்பெண் பெற்று, மாநகராட்சி 'ரேங்க்' பெற்றது. கடந்த ஆண்டு, 10 இடத்துக்குள் வர வேண்டும் என முனைப்பு காட்டப்பட்டது. ஆனால், பொதுமக்கள் கருத்து கேட்டபோது, எதிர்மறையான கருத்து சென்றதால், எதிர்பார்த்த 'ரேங்க்' கிடைக்கவில்லை.இம்முறை, 'ஸ்டார்' அந்தஸ்து வழங்கப்படுகிறது. மொத்தம், ஏழு ஸ்டார்கள். கோவைக்கு இரண்டாவது ஸ்டாரே கிடைத்துள்ளது.கழிவுகளே காரணம்மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மொத்தம், 5,000 மதிப்பெண்; 3,411 மதிப்பெண் பெற்று, நாடு தழுவிய அளவில், 40வது இடத்துக்கு கோவை வந்துள்ளது. கட்டட கழிவு மறுசுழற்சி மையம் அமைக்காதது; பொதுமக்களிடம் கருத்து கேட்டதில் போதிய மதிப்பெண் கிடைக்காததால், நம் நகரம் பின்னுக்குச் சென்றுள்ளது' என்றனர்.

footer
Top