கோவையில் விடுமுறை நாளான நேற்று, தீபாவளிக்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்; 'ட்ரோன்' மூலம் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.நேற்று காலை முதலே காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம், ராஜவீதி உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் அதிகளவு காணப்பட்டனர்.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சிரமமின்றி செல்ல முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீசார் மப்டி உடையில் ரோந்து சென்றனர்.கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் 'ட்ரோன்' மூலம் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.தீபாவளியை முன்னிட்டு, மாநகர் முழுவதும் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசார் என, 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.