logo
add image
the-kovai-city

The Kovai City - மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்க வேண்டும் - நடிகர் உதயநிதி ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தெப்பக்குளம் மைதானம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலக திறப்பு விழாவுக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் உதயநிதி ஸ்டாலின் நூலகத்தை சனிக்கிழமை திறந்துவைத்து பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம் என்றார். விழாவில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலர் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மாநகர திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, முன்னாள் மாவட்டச் செயலர் வீரகோபால், தொழிற்சங்கத் தலைவர் சிடிசி ரத்தினவேலு, இலக்கிய அணி அமைப்பாளர் திராவிடமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

footer
Top