நீலகிரி நாடளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 2009 முதல் 2014வரை ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் தகவல் தொடர்பு அமைச்சராக முத்திரை பதித்தவர். செல்போன் என்பது பணக்காரர்களின் கைகளில் தவழத்தான் முடியும் என்ற நிலையை மாற்றி ஏழை மக்களும் செல்போனை பயன்படுத்தலாம் என்ற இலக்கை இந்திய தேசமெங்கும் எட்ட செய்தவர்! கோடிக்காண செல்போன்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் முகமாக மாற்றி காட்டி சாதித்தவர். ஓரு ரூபாய்க்கு இந்தியா முழுவதும் பேசலாம் என்ற மகா மெகா சாதனையை செய்து காட்டியவர். ஆ.ராசா.
இவர் இந்திய அரசின் தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்நத மட்டிலும் பி.எஸ்.என்.எல். (BSNL) என்கிற அரசு நிறுவனத்தை இலாபகாரமாக நடத்திக் காட்டியவர். இரண்டாம் அலைகற்றை (2G) தொடர்பான நடுநிலை பார்வை இருப்பவர்களுக்கு புரியும் இவரின் நடவடிக்கையால், அரசிற்கு தான் லாபம் பன் மடங்கு கிடைத்தது என்ற உண்மையின் அடிப்படையில் தான் ஆ.ராசா குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றமே உறக்க தீர்ப்பளித்துள்ளது.
இப்படியெல்லாம் சாதனை பல புரிந்து இந்திய தேசமெங்கும் புகழ் மிக்கவராக ஆ.ராசா எனும் அடிப்படை சமுதாயத்திலிருந்து வருகின்ற ஓருவர் உயர்ந்தவ உயர்ந்துவிடுவரோ? என்ற நிலையில் எழுப்பப்பட்ட புனைவு தான் 2ஜி முறைகேடு என்ற குற்றச்சாட்டு இதிலிருந்து குற்றமற்றவராய் கடந்து வந்த ஆ.ராசா, சென்ற முறை நீலகிரி தொகுதியின் வளர்ச்சிக்காக பெறும் முனைப்பும் முயற்ச்சியும் எடுத்து காட்டியவர்.
தொகுதி முழுக்க என்னென்ன பிரச்சினைகளை கண்டும் கேட்டறிந்தும் அதனை நவர்த்தி செய்தவர் என்ற பேச்சு நீலகிரி தொகுதி மக்கள் மத்தியில் இன்றும் உலவுகிறது. வெற்றி பெற்றாலும், தோற்றாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நீலகிரி தொகுதியின் மீது கவனம் செலுத்தி வரும் ஆர்.ராசாவை தொகுதி மக்கள் மண்ணின் மைந்தராகவே பார்க்கின்றனர். எனவே ஆ.ராசாவின் வெற்றி என்பது தெளிவாக தெரிகிறது. ஆம் தமிழகம் முழுவதும் வீசூம் திமுக அலையினால் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைவது நிஜம் அப்படி அமைகின்ற நேரத்தில் ஆ. ராசா அமைச்சராக மாறுவது உறுதி.