logo
add image

மாண்புமிகு அம்மா அவர்களின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை கோகுலம் கார்டன் குழுமத்தின் சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மறைந்த தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை,காந்திபுரம் பகுதியில் உள்ள கோகுலம் கார்டன் குழுமத்தின் சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோகுலம் கார்டன் குழுமத்தின் நிறுவனர் தங்கராஜ் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து மலர் தூவி வணங்கினார். பின்னர் கோகுலம் கார்டன் குழும ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இப்போது, தனது பாதையையும், பயணத்தையும் தேர்வு செய்து களத்தில் வலிமையோடு நிற்கும் அதிமுக கூட்டணியை வரவிருக்கும் மக்களவைப் பொதுத் தேர்தலில், நாற்பதுக்கு நாற்பது என அதிமுக மகத்தான வெற்றியைப் பெற்றிட அயராது உழைத்திட கோகுலம் கார்டன் குழுமத்தினர் பாடுபடுவோம் என தெரிவித்தார்.

footer
Top