logo
add image
ettimadai-mla

சாப்ட்வேர் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிப்பு

தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி கடந்தாண்ட காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என தொழில் நுட்ப துறையினர் முதன்மை செயலாளர் சந்தோஷ்பாபு கோவையில் கூறினார். தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி கடந்தாண்டில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. வரும் ஆண்டில், 10 சதவீதம் வளர்ச்சி பெற்று ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் தகவல் தொழில்நுட்ப பணிகளை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிராமப்புறங்களில் கம்ப்யூட்டர் தெரிந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பும், கம்ப்யூட்டர் தெரியாத பெண்களுக்கு பயிற்சி அளித்து வேலை கொடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு என ஒன்பது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஒசூர், திருநெல்வேலி, சோழிங்க நல்லுார் உள்ளிட்ட இடங்களில் இவை செயல்பட்டு வருகின்றன.கோவையில் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, முழுமையாக நிரம்பியுள்ளது. கோவையிலிருந்து தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி 4,589 கோடி ரூபாய். இது இந்த ஆண்டு 10 சதவீத வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, சந்தோஷ் பாபு கூறினார்

footer
Top