கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 20ம்தேதி வெள்ளிகிழமை அன்று கோவை மாவட்டத்தில் கடையடைப்பும் அன்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் 25000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் மொத்த சாலைகளும் ஸ்தம்பித்து போனது. அப்போது திரண்டிருந்த கூட்டம் ஆம்புலன்சுக்கு ஒன்றுக்கு வழிவிட்டு, தன் மனித நேயத்தை வெளிப்படுத்தியது.
உச்சக் கட்டமாக ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பரிக்கும் ஆர்ப்பாட்ட கண்டனக்குரல்களுக்கு மத்தியில் அவ்வழியே வந்ததும், அங்கு அணிதிரண்டிருந்த முஸ்லிம்கள், உடனே அவர்களுக்கு மரியாதை செய்து வழிவிட்டு பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர்.!!! மாநாட்டின் தொண்டர் அணியினர் ஐயப்ப பக்தர்களுக்கு துணையாக நின்று அந்த மாபெரும் கூட்டத்தை கடக்க உதவினர். இதைக் கண்ட காவல் துறையினர் நெகிழ்ந்து போய் முஸ்லிம்களை பாராட்டினர்.