கோவை:கோவை டவுன்ஹால், மணிக்கூண்டு அருகில் வீற்றிருக்கும் கோனியம்மனுக்கு, ஆண்டுதோறும் மாசி மகத்தேர்த்திருவிழா நடக்கிறது. மதியம், 2:05 மணிக்கு, ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடலில் இருந்து, திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜவீதியில் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக வலம் வநத்து, மாலை, மீண்டும் ராஜவீதியில் நிலையை அடைகிறது.
இன்று மதியம், 12:30 முதல் இரவு, 8:00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சுங்கம் பைபாஸ், ரயில்வே மேம்பாலம், கிளாசிக் டவர் வழியாக செல்ல வேண்டும்.
அவிநாசி ரோடு, திருச்சி ரோட்டில் இருந்து வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், உக்கடம் சென்று பேரூர் பைபாஸ் ரோடு வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து பேரூர் செல்ல வேண்டும்.
பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜ வீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள், சலீவன் வீதி வழியாக காந்திபார்க் அடைந்து நகருக்குள் செல்ல வேண்டும். ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., வீதி ஆகிய ரோடுகளில் காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். உள்ளூர் விடுமுறை 'இன்று ஒரு நாள் மட்டும், டவுன்ஹால் சுற்றுப்பகுதி களில் உள்ள பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். விடுமுறையை ஈடுகட்ட, அந்தந்த பள்ளிகளின் விருப்பப்படி, சனிக்கிழமைகளில் வேலைநாளாக அறிவித்துக் கொள்ளலாம். இன்று துவங்கும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் எந்த மாற்ற மும் இல்லை' என, முதன்மை கல்வி அலுவலர் உஷா, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.