logo
add image
Blog single photo

அருள் மிகுஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில் 17வது மாபெறும் நவசண்டி மஹாயாகம்

கோவை தடாகம் ரோட்டில் உள்ள அருள் மிகுஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவிலில் உலக நலன் வேண்டி 17வது மாபெறும் நவசண்டி மஹாயாகம் வருகிற 19.02.2019 முதல்21.02.2019 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 19.02.2019 செவ்வாய்க் கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவகோள் வேள்வி, மஹாலஷ்மி ஹோமம், முதல்கால பூஜையும் இரவு 8.30 மணியளவில் மஹா பூர்ணாகுதி, மஹா தீபாரதனையும், 20.02.2019 புதன் காலை 9.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், காலை 11.30 மணிக்கு அருட் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 4.00 மணிக்கு வாஸ்து சாந்தி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 21.02.2019. அன்று காலை 5.00 மணிக்கு 13 அத்யாய ஹோமம் ஆரம்பம் ஆகிறது. மேலும் மஹா அன்னதானம் நடைபெற உள்ளது. மாலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உட்பட பலவேறு நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது. இத் தகவலை ஸ்ரீ காளிகாம்பாள் உபாசகர் சிவத் திரு ஞான சேகர சிவாச்சாரியார் தெரிவித்தார்.

footer
Top