குறிச்சி 98வது டிவிஷன் முத்தையா நகர் முதல் தெருவில் பல மாதமாக பயன்பாட்டில் இல்லாத பெரிய குழாய்கள் கேட்பாறற்று கிடக்கிறது. மேலும் அதற்கு அருகில் குப்பைகள் பெரும் அளவில் கொட்டப்படுகிறது. குழாய் மற்றும் தேங்கியுள்ள குப்பைகளில் விஷ பாம்புகள் அடிக்கடி அந்த பகுதியில் சுற்றுகின்றன.
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அந்த வழியாக செல்லவே பயப்படுகின்றனர். சுகாதார பணியாளர்களிடம் பல முறை கூறியும் எந்த பயனும் இல்லை. குறிப்பு : அந்த வழியை செங்கோட்டையா பள்ளி மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்றனன். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.