logo
add image
dr-mahendran

கோவை நாடளுமன்ற தேர்தல் மாற்றத்தின் முகவரியாய்... மகேந்திரனின் வெற்றி - Dr. Mahendran M.B.B.S, M.D.,

டாக்டர் மகேந்திரன்... பொள்ளாச்சியில் பிறந்தவர் தான் ஆனாலும் தமிழகத்தை பற்றிய பரந்த பார்வைக் கொண்டவர்! டாக்டர் மகேந்திரன்... மருத்துவர் தான் ஆனாலும் மக்களை பற்றி சிந்திக்க கூடியவர்! இவரின் செயல்பாடு சமூகத்திற்கானதாகவே இருந்து வந்துள்ளது... மருத்துவத்தை தாண்டி மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை இவரின் எண்ணம் என்றைக்குமே அசைப்போட்டே வந்துள்ளது. வேளாண்மை இன்றைக்கு ஆண்மையற்று போகிவிடுமோ? என்ற நிலை நிலவுகிறது. அடிப்படையில் வேளாண் குடும்பத்தில் பிறந்த டாக்டர் மகேந்திரனுக்கு விலை நிலங்களை விடவும் விளை நிலங்களின் மீதே தீராத காதல்! எனவே விவசாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற துடிப்பு இவருள் என்றைக்கும் உண்டு! ஆக மருத்துவமும் வேளாண்மையும் இவரின் இரு கண்களாகப் போனது! இதை தாண்டி திரைப்படங்களெல்லாம் இவருக்கு புரியாத ஒன்றாகிப் போனது!

ஆரோக்கிய உலகையும், இயற்கை வேளாண்மை பற்றியே சிந்திக்கின்ற டாக்டர் மகேந்திரனுக்குமக்களை பற்றியும் விவசாயிகள் பற்றியும் தானே சிந்தனை எழும்! ஆனால் இன்னொரு புறத்திலோ மகா கலைஞனாய்... உலக நாயகனாய்... இந்தியா முழுமைக்கும் அறிமுகமான கமல்ஹாசன், தமிழக திரை உலகில் தன்னுடைய 5 வயது முதல் 60 வயதை தாண்டியும் புது புது அவதாரமாய் அரிதாரமாய் பூசிக் கொண்டு, உலக திரை துறைக்கே முன்னோடியாக நின்றுக் கொண்டிருப்பவர். டாக்டர் மகேந்திரனோ திரைபட புரிதல் இல்லாதவர். அதில் இஞ்சித்தும் ஆர்வம் காட்டவதர்! என்றாலும் கமல்ஹாசன் என்ற ஆளுமை திரை துறையைத் தாண்டி ஆழ அகன்ற உலக அறிவில், உலக வரலாற்றில், பூகோள ஞானத்தில் வல்லவாய் இருப்பவர் என்பது தமிழகம் அறிந்த உண்மை... அதோடு

மட்டுமல்ல, கோடிக் கணக்காய் வருவாய் ஈட்டும் துறையில் இருந்த போதும், இந்தி எதிர்ப்பு, ஈழ பிரச்சினை என அவ்வப்போது குரல் கொடுப்பது கமலின் வழக்கம். அதன் அடிப்படையில் தான் 2016-ல் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையில், சென்னை சின்ன பின்னமானது. அரசு சார்பில் துரித நடவழக்கை காணோம். அப்போது தான் கமல், அரசின் நடவழக்கையை கடுமையாக விமர்சித்தார். அது ஜெயலலிதா ஆட்சி செய்துக் கொண்டிருந்த நாட்கள், அன்றிலிருந்து கமலுக்குள் பொது வாழ்விற்கு வர வேண்டும் என்ற எண்னம் அதிகமானது. அப்படி எண்ணத் துவங்கியது தான் இன்று மக்கள் நீதி மய்யமாய் உருவெடுத்து நிற்கின்றது. அப்படி தான் 2019 - இந்திய நாடளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதியிலும் போட்டியிட உந்து சக்தியானது! இந்த புள்ளியில் தான் டாக்டர். மகேந்திரனும் கமல்ஹாசனும் இணைய, டாக்டர். மகேந்திரனுக்கு கோவை நாடளுமன்ற தொகுதியில் போட்டியிட இடம் வழங்கப்பட்டது. இன்றைக்கு கமல்ஹாசன் எண்ணுவதைப் போல 'நல்லவர்கள் வர வேண்டும் அதுவும் வல்லவர்களாய் இருக்க வேண்டும் என்பதில் டாக்டர் மகேந்திரன் சிறிதும் அச்சுப் பிசறமால் உள்ளார். பரப்புரைக்குச் செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு டாக்டர் மகேந்திரனுக்கு சாதகமாகி வருகிறது. மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு மட்டுமே தீர்வு! நாளை தமிழகத்தின் எதிர்காலம் மக்கள் நீதி மய்யம் என்பது தெளிவு!...

footer
Top