டாக்டர் மகேந்திரன் புகழ் பெற்ற பரம்பரையிலிருந்து வந்தவர்! வசதிகளுக்கு குறைவில்லாதவர்! அடிப்படையில் விவசாயி... பெறுமை மிகுந்த மருத்துவர்... சமூக சிந்தனையாளர்... நாட்டை பற்றி நாளும் எண்ணக்கூடிய சில மருத்துவர்களில் இவரும் ஒருவர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து இன்றைக்கு 2019 - நாடளுமன்ற பொது தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். மனம் படைத்தவர்... பணம் படைத்தவர்.. டாக்டர் மகேந்திரன், இவரை நாடளுமன்ற உறுப்பினராக கோவை மக்கள் தேர்ந்தெடுத்தால் வழக்கமான அரசியல்வாதியாக டாக்டர் மகேந்திரன் இருக்கமாட்டார், மாறாக ஊழலற்ற நாடளுமன்ற உறுப்பினராக செயல்படுவார் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. பணத்தை பார்த்தவர்... புகழை சேர்த்தவர்... மருத்துவ துறையிலே மனிதாபிமானத்தை காட்டுபவர்! இவ்வளவு இருந்தும் பகட்டில்லாதவர்! அனுகுவதில் எளியவர். பழகவதில் இனியவர். இயல்பாகவே எல்லா மருத்துவர்களுக்குமான தோரனையை கடந்து நிற்பவர்.
தேர்தல் களத்தில் நல்லது செய்ய வேண்டும் என்று வந்திருப்பவர். தான் பிறந்த கோவை மாவட்டத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் வந்திருப்பவர். எல்லாமும் நிறைவாய் பெற்றிருக்கும் டாக்டர் மகேந்திரனுக்கு அரசியல் பணம் ஈட்டி வாழ்வு நடத்த வேண்டும் என்ற தேவையில்லை. எனவே களத்திற்கு வரும் போதே தூய எண்ணத்தோடு வருகின்ற டாக்டர் மகேந்திரன் வழக்கமான அரசியல்வாதி அல்ல என்பதையும் கோவையின் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய திட்டமங்களை தொலைநோக்கு அறிவோடு அவர் சொல்லும் விசயங்கள் அவரின் உரையாடலில் தெரிகின்ற தெளிவையும் கானும் போது, கோவை மக்கள் மகேந்திரனை தேர்ந்தெடுத்தால், வரும் ஐந்தாண்டுகளில் கோவை உண்மையிலே பெறும் வளர்ச்சியை இட்டும் என்பது நிதர்சனமான நிஜமே!