2019-2020 புது வருடக்கணக்குத் துவங்கும் நன்னாளான 01-04-19 - திங்கட்கிழமை முழு நாளும் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் சிறப்பு பூஜை, சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை, சிறப்பு கூட்டுத்தியானம் நடைபெற்றது. எங்களை உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கின்ற அன்பு ஆத்மாக்களாகிய தங்களின் தொழில் வளர்ச்சிக்காக ஆறு வேளை கூட்டுப்பிரார்த்தனையும், மூன்று வேளை கூட்டுத்தியானமும் சிறப்பாக நடைபெற்றது. தங்களது தொழில் நிறுவனத்தின் முழுப்பெயரை இந்த எண்ணுக்கு Whats App அல்லது SMS மூலமாக அனுப்புமாறு வேண்டுகிறோம்... தாங்கள், தங்களது தொழிலில் சிறந்து விளங்கி முதன்மை பெறவும், தங்களது நிறுவனம் மேன்மேலும் வளர்ந்து பலப்பல தொழில் நிறுவனங்களாகப் பெருகவும் நாங்கள் அனைவரும் உளமார உயிராரப் பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம்.