logo
add image
kovai-rain

கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - கோவை மக்கள் உற்சாகம்

கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்' என்று, கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கோவை மாநகரில், நேற்று பகல் நேரத்தில் மழை பெய்தது. மாலை வரை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு, கோவையிலும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.'கோயம்புத்துார் வெதர்மேன்' சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் மாதங்களிலும், கோவைக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.


footer
Top