கோவை:தள்ளுவண்டிக் கடைகள் நடத்த, போலீசார் அனுமதி வழங்கியதால், உரிமையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.புதிய விதிகளுடன் கடைகள் செயல்பட, ஏற்கனவே மாநகராட்சி அனுமதி அளித்திருந்த நிலையில், நேற்று போலீசாரும் அனுமதி அளித்தனர். கோவை சாலையோர, நடைபாதை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் மணி கூறுகையில், ''போலீசார் அறிவுறுத்தியுள்ள விதிகளை பின்பற்ற, உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.