கோவையில் எதிர்வரும் நாட்களில் வெப்பம், அதிகரித்து காணப்படும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் மரகதம் தெரிவித்தார்.தமிழகத்தில் நாளுக்கு நாள், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், வரும் 6, 7 ஆகிய தேதிகளில், 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் மரகதத்திடம் கேட்டபோது, கோவை மாவட்டத்தில் வரும் வாரத்தில், 37, 38 டிகிரி செல்சியஸ் வரை வெயிலால் வெப்பம் அதிகரிக்கலாம். இரவு நேர வெப்பமும் அதிகமாக காணப்படுவதால் தான் குளிரை நாம் சிறிதும் உணர முடிவதில்லை,என்றார்.