நானம்மாள்.. நூறு ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெண்மணி! இன்றைய காலகட்டத்தில் நூறு ஆண்டுகள் என்பது மலைப்பாக இருக்கும் சேதி!. அதுவும் ஆரோக்கியமாக 50 வயது பெண் போல் இயங்குவது என்றால் நம்புவதற்கே சிரத்தை உண்டாக்கும் ஆகால் உண்மை அது தான்...
நானம்மாளை பார்க்கும் போது ஒரு இயல்பான பாட்டியைப் பார்ப்பது என்று தோற்றம் அளித்தாலும் உடலை வில்லாக வளைத்து யோகம் நடத்திடும் அழகை பார்க்க யோகம் தான் வேண்டும்.
அத்துனை அழகு! அபாரம்!! அற்புதம்!!! யோகாவில் எத்தனை ஆசனங்கள் உண்டோ அத்துனை ஆசனங்களையும் தன்னுடைய 3வயது முதல் 97 ஆண்டுகள் என்ற நீண்ட பயனத்தில் உள்ளார். யோகா என்பது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தையும் உறுதியும் ஊட்டக்கூடிய ஒரு கலை மட்டுமல்ல நம்முடைய கலாசாரமும் கூடத்தான்.
நானம்மாள் ஆசனங்களை செய்து காட்டும் போது நம்முன் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கின்றது.நம்மாளும் முடியும் என்கிற உற்சாகம் நம்மை கரை புரளந் செய்கிறது. 100 வயது நானம்மாள் இது வரை நோய் நொடி என்று படுத்ததும் இல்லை மருந்து மாத்திரை மருத்துவமனை என்றும் சென்றதுமில்லை! எல்லாமே பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம் தான் உணவு முறைகளின் மாற்றத்தால் தான் நாம் நோயில் கிடக்கிறோம். பாயில் கிடக்கிறோம் எனவே மண்ணுக்கேற்ற உணவை உண் என்று இவர் சொல்லும் போது நம்முன் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற குரல் ஓங்கி ஓலிக்கத் துவங்கியது.