கோவை மாநகர் 99-வது வார்டு அதிமுக செயலாளராக இருப்பவர் ரபீக் அடிப்படையில் மனிதநேயமும்,சமூக சிந்தனையும் நிறைந்த இவர், தனது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து முடிக்க
அதிகாரிகளை அனுகி அந்த பணிகளை துரிதப்படுத்திடும் பாங்கு அலாதியானது!
99-வது வார்டில் சாக்கடை பிரச்சினை என எதுவாகினும் இவரின் சீரிய பணியால் பிரச்சனைக்கு
இடமில்லாது போய்விடுகிறது. அதே சமயம் கட்சி பணியிலும் இவரின் உழைப்பு வலிமையானது! இயல்பாகவே எவரும் இவரை எளிதில் அனுகி, பிரச்சினைகளை
சொன்ன மாத்திரம் அதற்கான தீர்வையும் அதை தீர்த்து வைக்க இவரின் முயற்சியும் தான் 99-வது வார்டில் நிறைய அதிமுக விசுவாசிகளை உருவாக்கி வருகிறது.
ரபீக்கின் இத்தகைய செயல்பாட்டில் கவர்ந்து, சிறந்த அர்பணிப்பு உணர்வோடு பொது மக்களிடமும், கட்சியிலும் செயலாற்றுவதை கண்டு, அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் உள்ளன்போடு
நேரில் பார்க்கும் போதும், பொது மேடையிலும் 'தம்பி ரபீக்'' என்று அழைக்கின்றார்.
இது ரபீக்கின் சமூக செயல்பாட்டிற்கும், கட்சி பணிக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் கொரானா பாதிக்கப்பட்டிருக்கும்
இன்றைய சூழலில் ஊரடங்கு கால கட்டத்தில் வார்டு முழுக்க சூறாவளியாய் சுழன்று பொது மக்களின் குறைகளை தீர்த்து வைத்தும், நிவாரண பொருட்களையும் அளித்து வார்டு முழுக்க கொரானா விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதில் ரபீக்கிற்கு பெரும் பங்குண்டு.
அதே சமயம் கிணத்துக்கடவு சட்ட மன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் நிவாரணப் பொருட்களை வழங்கியதை தனது வார்டில் முழுமையாக கொண்டு சேர்த்ததில் இரவும் பகலும் பாராது உழைத்த பாங்கு பொது மக்களால் பாரட்ட பெறும் விஷயமாக உள்ளது. அதே சமயம் இவரின் உற்ற நண்பர் சுராவும் ரபீக்கின் செயல்பாட்டிற்கு இணையாகவும் உறுதுணையாகவும் இருந்து, பொது மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது.