ஸ்ரீனிவாசன்... உழைப்பின் அடையாளம்! பொது வாழ்வில் வெளிப்படையாக இருப்போர் சிலரில் இவரும் ஒருவர்!! "பதவி வரும் போது பணிவும் வரவேண்டும் துணிவும் வர வேண்டும் தோழா" என்ற பாட்டிற்கு பொருத்தமானவர்....
எளிமையே ஸ்ரீனிவாசன் இயல்பு! இனிமையே அவரின் பண்பு! தான் சார்ந்த இயக்கத்தில் உண்மையாகவும், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பாகவும் கொண்ட ஸ்ரீனிவாசன், நீலாம்பூர் ஊராட்சி பகுதிகளில் அறிமுகமானவர். அரசு தொழில் பயிற்சி கூடத் (GoVT. ITI)தில் பயின்ற இளைய தலைமுறையைச் சார்ந்த செயல்பாட்டாளர். படித்திருக்கும் காலத்திலே கலைஞரையும், கலைஞானியையும் இருகண்களாக போற்றியவர்.
கருணாநிதி மீது கொண்ட பெரும்பற்றால் தி.மு.கவில் உறுப்பினராக சேர்ந்தார். மறைந்த முன்னாள் தி.மு.க சூலூர் சட்டமன்ற உறுப்பினரும், சூலூர் பேரூராட்சி தலைவராகவும் இருந்த எஸ்.எஸ். பொன்முடியை வழிகாட்டியாகக் கொண்டு, கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர் ஸ்ரீனிவாசன். இதன் மூலம் நீலாம்பூர் ஊராட்சியில் தி.மு.கவை வார்த்தெடுத்தவர் ஸ்ரீனிவாசன் என்ற பெயரையும் புகழையும் பெற்றார். இதன் காரணமாக ஸ்ரீனிவாசன்க்கு நீலாம்பூர் ஊராட்சி கழக செயலாளர் பதவி தேடி வந்தது. முன்னைவிடவும் முனைப்போடு செயல்படத் துவங்கினார்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு இவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அதே சமயம் கருணாநிதி இல்லாத கழகம் ஸ்ரீனிவாசனுக்கு மன கசப்பைத் தான் தந்தது.
இந்த நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன் ஊழல்லாத தமிழகம், நேர்மையான ஆட்சி, என்ற அரசியல் முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார்.அரசியலில் கருணாநிதியை போலவே திரை துறையில் கமல்ஹாசன் கமல்ஹாசனின் நேசராக விளங்கிய ஸ்ரீனிவாசன், தி.மு.க.விலிருந்து, மக்கள் நீதி மய்யம் நீலாம்பூர் ஊராட்சியில் பெரும் வளர்ச்சியை எட்டத் துவங்கியுள்ளது.
இதன் பலனாக தலைமையின் பார்வை ஸ்ரீனிவாசனின் மீது விழ, இன்றைக்கு ஸ்ரீனிவாசன் மக்கள் நீதி மய்யத்தின் சூலூர் ஒன்றிய பொறுப்பாளராக சூலூர் ஒன்றியத்தில் கட்சியை மேலும் வார்த்தெடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.