கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வஹாப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பேசுகையில் :
- அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படும்.
- அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.
- ஏழை எளிய மக்கள் பயன் பெரும் வகையில் உயர்தரமிக்க கணினி மையங்கள் அமைக்கப்படும்
- .அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளின் திறமையை ஊக்குவிக்க தகுதியான ஆசியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும்.
- கல்லூரி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் ஸ்கில்ஸ் டெவெலப்மென்ட் சென்டர் அமைக்கப்பட்டு அவர்கள் திறமையை மேம்படுத்த வழி வகை செய்யப்படும்
- அரசு கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும்
- கல்லூரி மாணவர்களுக்கு படிக்கும் போதே வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைத்து பயிற்சிகள் அளிக்கப்படும்
-
அரசு மருத்துவனைகளின் தரம் உயர்த்தப்படும்.
- நோயாளிகள் பயன் பெரும் வகையில் தொகுதிக்குப்பட்ட 19 வார்டுகளிலும் மருத்துவ ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
- அரசு மருத்துவர்களின் ஊதியம் உயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றி தரப்படும்.
- தொகுதி முழுவதும் நோயாளிகளின் தேவையை கருதி இரவு நேர கிளினிக் செயல் படுத்தப்படும்
-
பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு டைலரிங் மற்றும் கணினி வகுப்புகள் டியூஷன் சென்டர் அமைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யபடும்
- சிறுகுறு தொழிலாளர்களின் நலவாரியம் அமைத்து தரப்படும்
- gst குறைக்க வழிவகை செய்யப்படும்
- gdpயை உயர்த்த வழிவகை செய்யப்படும்
- படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேலை வாய்ப்பு முகாம்கள் அமைத்து தரப்படும்
- தொழிளாளர் நல வாரியம் அமைத்து தரப்படும்
- வேலை வாய்ப்பு பயிற்சி மையங்கள் அமைத்து தரப்படும்
- தெற்கு தொகுதியை சுற்றியுள்ள குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த வழி வகை செய்யப்படும்
- வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டாய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவோம்.
- அனைத்து மக்களும் பயன் பெரும் வகையில் நடை பயிற்சி பூங்காக்கள் அமைக்கப்படும்
- மக்கள் பயன் பெரும் வகையில் தமிழர் மரபு வரலாறு சார்ந்த நூலங்கள் அமைக்கப்படும்
- பழங்கால தமிழர்களின் கலை அறிவியல் வரலாறு வாழ்கை முறைகள் பற்றி வரும் தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் ம்யுசியங்கள் அமைக்கப்படும்
-
போக்குவரத்து நெரிசலை நீக்க சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் செயல்படுத்தப்படும்
சாலைகள் சீரமைக்கப்படும் குடிநீர் பிரச்னைகள் தீர்க்க வழிவகை செய்யப்படும்
- கால் சென்டர் அமைத்து தொகுதி பிரச்சினைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- பாதாள சாக்கடை பிரச்சனைகள் சரி செய்யப்படும்
- விவசாயிகள் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்
- விவசாய சந்தைகள் அமைத்து மக்களுக்கும் விவசாயிகளுக்கும் விளைபொருட்களை நேரடி விற்பனை செய்ய வழி வகை செய்யப்படும்
- விவசாய பொருட்களை பாதுகாக்க குளிர்சாலை கிடங்குகள் அமைத்து தரப்படும்
- பால் மட்டும் பால் சார்ந்த பொருட்களை தயாரித்து மலிவு விலையில் மக்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும்.
போன்ற வாக்குறுதிகளை அளித்து மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்