இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்..யோகி ஆதித்யநாத் கோவைக்கு வந்ததையொட்டி,
பைக் பேரணி என்ற பெயரில் மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம்,
வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.
வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து பணியாற்றுவதை மனிதாபிமான அடிப்படையிலும், அனைவரும் இந்தியர்கள் என்ற பார்வையிலும் தவறு சொல்ல முடியாது.
அது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதேவேளை, பாஜகவினர், தங்கள் ஓட்டு வங்கியாகவும், இவர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பது யோசிக்கவைக்கிறது.
வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாகவும், வகுப்புவாதச் சிந்தனை தலையெடுக்காத நல்லிணக்க மாநிலமாகவும் உள்ள தமிழகத்தைத் துண்டாட
திட்டமிட்டிருப்பதை யூகிக்க முடிகிறது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்ற பாஜகவின் வாக்குறுதி, தமிழ் மொழியை வலுக்கட்டாயமாகச் சிதைப்பது போன்ற செயல்கள்
இதனை உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தைச் சீர்குலைக்கும் அஜெண்டாவைப் புரிந்துகொள்வோம்! புறக்கணிப்போம்! நமக்கான அரசியல் போட்டி, நமக்குள் இருக்கட்டும்! நம் எதிர்காலம் காக்க,
அந்நிய சக்திகளை விலக்கிவைப்போம்!