logo
add image
kovai-indrabanarji

பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி கோவையில் பேச்சு

பொருளாதார குற்றங்கள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்த தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை அகாடமியில் நேற்று தொடங்கியது விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி மற்றும் சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பொருளாதார குற்றங்கள், நிதி திட்டத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் நேர்மைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு விளைவிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளாதார குற்றங்கள் தடையாக உள்ளதாக 29–வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம், உரிமம் பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தவறாக பயன்படுத்துவது, அரசுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்புகள் ஆகியவைகளும் பொருளாதார குற்றங்களாகும். பங்குச்சந்தை மோசடி, கள்ளச்சந்தை, கடத்தல், கலப்படம், நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல், காப்பீட்டு மோசடி, மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவது சமூக பொருளாதார குற்றங்களாகும். அதிகாரத்தில் இருப்பவர்களால் செய்யப்படும் 'ஒயிட் காலர் குற்றம்' பொருளாதார குற்றங்களில் வருகிறது. இதுவரை பொருளாதார குற்றங்கள் வரையறுக்கப்படவில்லை என்றாலும்இ கடந்த 2014–ல் தேசிய குற்ற ஆவண காப்பகம் 24 வகையான பொருளாதார குற்றங்கள் என சொல்லப்பட்டதில் வரி ஏய்ப்பு முதன்மையாக உள்ளது. பொருளாதார குற்றங்கள் அதிகரிப்பு நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், வழக்கு சாட்சியங்களை ஆராயவும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக நீதிபதிகள் அறிந்து கொள்ள வேண்டும். கணினி தொழில் நுட்பங்களை மட்டுமே வைத்துக்கொண்டு பொருளாதார குற்றங்களில் எளிதாக ஈடுபடுகின்றனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் நமது நாட்டு ராணுவ வீரர்கள் 40 பேர் பலியானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 40 பேரின் குடும்பங்கள் அனாதையாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

footer
Top