கோவை செட்டிப்பாளயைத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளது.ஜல்லிக்கட்டு துவங்குவதற்கு முன்னர், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின்னர்இஉள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்க தலைவர் ஆகியோர் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தனர். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரது காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பாதுகாப்புபணியில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.